மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் மியாமி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை 2-6, 6-4, 7-6(1) என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தன் வசப்படுத்தினார் முர்ரே.
2009-ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக மியாமி மாஸ்டர்ஸ் பட்டத்தை முர்ரே கைப்பற்றியுள்ளார்.
இந்த வெற்றியின்மூலம், தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை பின்னுக்குத் தள்ளிய முர்ரே இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
வெற்றிக்குப் பிறகு முர்ரே கூறுகையில், இது சவால் நிறைந்த போட்டியாகும். போட்டியில் இருவருக்குமே வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆட்டத்தின் இறுதியில் இருவரும் தடுமாற்றம் கண்டோம் என்று தெரிவித்தார்.
"இப்போட்டி மிகவும் நீண்ட நேரம் நடைபெற்றது. அதனால், நான் மிகவும் சோர்வுற்றேன். எனினும் இறுதியில் முர்ரே சிறப்பாகச் செயல்பட்டார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்' என்று ஃபெரர் தெரிவித்தார்.
ஃபெரர் ஒரே ஒருமுறை மட்டும் இறுதிப்போட்டியில் முர்ரேவை தோற்கடித்துள்ளார். அவர், 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் முர்ரேவை வீழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை 6 மணி முதல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்! தற்சாா்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா்!

சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது
முடிவுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்: 61 நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவர்கள்

தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுரை மண்டல ஐ.ஜி. ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



