இந்தியாவின் பிராட்மேன் சச்சின் டெண்டுல்கர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.
சச்சின் 40-வது வயதை ஏப்ரல் 24-ம் தேதி எட்டுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு "அவுட் லுக்' வார இதழ் சச்சின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அதில் ஹேடன் கூறியிருப்பது: இந்திய கிரிக்கெட்டை உச்சத்துக்கு எடுத்துச் சென்ற பெருமை சச்சினையே சேரும். எதிர்காலத்தில் அவரைப் பற்றிய பல புத்தகங்களும், திரைப்படங்களும் வர வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல கிரிக்கெட் தொடர்களில் இந்தியா வெல்ல சச்சின் முக்கியக் காரணமாக இருந்துள்ளார். சிறந்த கிரிக்கெட் வீரர்களை பட்டியலிடச் சொன்னால் சச்சினுக்குத்தான் முதலிடும் தருவேன். கிரிக்கெட் வீரர் என்பதால் மட்டுமல்ல, அவரது சிறந்த குணங்களுக்காவும் அவர் ரசிகர்களால் பெரிதும் நேசிக்கப்படுகிறார்.
இந்தியாவில் கோடிக் கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அவர் பூர்த்தி செய்துள்ளார். மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கூட சிறப்பாக விளையாட சச்சின் ஒருவரால் மட்டுமே சாத்தியமாகும்.
கிரிக்கெட்டில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டபோதிலும், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காலகட்டத்திலும் அவர் எந்தவிதமான தடுமாற்றத்துக்கும் இடம் கொடுத்தது இல்லை. எனவே இந்தியாவில் கிரிக்கெட்டைவிடவும் சச்சின் உயர்ந்தவராக இருக்கிறார். இந்தியாவின் நம்பிக்கையாகவும், ஒரு தலைமுறையினர் பின்பற்றும் கலாசாரமாகவும் அவர் போற்றப்படுகிறார்.
சிட்னி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அவரது ஆட்டம் என்னால் மறக்க முடியாது. அதிக சிரமப்படாமல் அதே நேரத்தில் மிகவும் நேர்த்தியாக அவர் விளையாடிய விதம் இப்போதும் என் மனதில் உள்ளது என்று ஹேடன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

