ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற உள்ள ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள சூப்பர் கிங்ஸ் 4 ஆட்டங்களில் (கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப், பெங்களூர் அணிகளுக்கு எதிராக) வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டங்களில் (மும்பை, புணே அணிகளுக்கு எதிராக) தோல்வியடைந்துள்ளது.
அதே நேரத்தில் ராஜஸ்தான் அணியும் 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளையும் (டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளுக்கு எதிராக) 2 தோல்விகளையும் (புணே, பெங்களூர் அணிகளுக்கு எதிராக) பெற்றுள்ளது.
கேப்டன் திராவிட், வாட்சன், ரஹானே, ஸ்டுவர்ட் பென்னி ஆகியோர் ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். இவர்களது பேட்டிங் சரியாக அமையாத காரணத்தினால்தான் முந்தைய ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியடைய காரணமாக இருந்தது. பந்து வீச்சில் ஷான் டெய்ட், ஸ்ரீசாந்த், கெவன் கூப்பர், சித்தார்த் திரிவேதி, ராகுல் சுக்லா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
மைக்கேல் ஹசி, முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, ஜடேஜா, பத்ரிநாத், பிராவோ என சென்னை அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. ஜடேஜா தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். பந்து வீச்சிலும் சாதிக்கிறார்.
இவை அனைத்துக்கும் மேலாக அதிருஷ்டம் பெருமளவில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக களமிறங்கி வருகிறது.
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் "நோ பால்' காரணமாக சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. அதே போல கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜாவின் கேட்ச் தவறவிடப்பட்டதால்தான் ஆட்டம் சென்னைக்கு சாதகமாக திரும்பியது என்பதை மறுக்க முடியாது.
எனினும் இப்போட்டித் தொடரில் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகச்சிறப்பாக விளையாடி வரும் ராஜஸ்தான் அணி, எளிதில் வெற்றியை விட்டுக் கொடுத்துவிடாது.
எனவே இந்த ஆட்டம் சூப்பர் கிங்ஸ் அணிக்கு சவாலானதாகவும், ரசிகர்களுக்கு விறுவிறுப்பானதாகவும் அமையும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சூப்பர் கிங்ஸ் அணிக்கு கூடுதல் பலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

