நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சர்வதேச செஸ்: ஆனந்துக்கு முதல் வெற்றி

நார்வேயில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியின் 3-வது சுற்றில் ஆனந்த் வெற்றி கண்டுள்ளார்.

News image
Updated On :12 மே 2013, 1:12 am IST

நார்வேயில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியின் 3-வது சுற்றில் ஆனந்த் வெற்றி கண்டுள்ளார்.

10 பேர் பங்கேற்றுள்ள 9 சுற்றுகளைக் கொண்ட இப் போட்டியின் 3-வது சுற்றில் பல்கேரியாவின் வேஸலின் டோபலோவை 41-வது நகர்த்தலில் வீழ்த்திய ஆனந்த், ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியனுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆனந்த்-டோபலோவ் இடையிலான இந்த ஆட்டம், 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தை நினைவுபடுத்துவதாக அமைந்தது. 2010 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர்கள் இருவரும் மோதினர். அதில் ஆனந்த் வெற்றி கண்டார். அந்தத் தோல்வியில் இருந்து மீளமுடியாத டோபலோவ், இப்போது மீண்டும் ஆனந்திடம் தோல்வி கண்டுள்ளார்.

அதேநேரத்தில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் 3-வது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை வீழ்த்தினார். இதன்மூலம் தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்த கர்ஜாகின் 3 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றார்.

அஜர்பைஜானின் டெய்மர் ரட்ஜபவ், நார்வேயின் மாக்னெஸ் கார்ல்ùஸன், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா, ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லர் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளனர்.

சீனாவின் வாங் ஹாவ், டோபலோவ் ஆகியோர் தலா 1 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், நார்வேயின் லத்விக் ஹமர் புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்திலும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.