நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பஞ்சாபுக்கு 151 ரன்கள் இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.

News image
Updated On :12 மே 2013, 1:17 am IST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி, கேமரூன் ஒயிட் தலைமையில் களமிறங்கியது. பஞ்சாப் அணியில் டேவிட் ஹசி நீக்கப்பட்டார்.

டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த ஹைதராபாத் அணியில் ஷிகர் தவன் 15, விஹாரி 5, ஒயிட் 10, கரண் சர்மா 22 ரன்களில் ஆட்டமிழக்க, 15 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது ஹைதராபாத்.

இதன்பிறகு தொடக்க ஆட்டக்காரர் பார்திவ் படேலுடன் இணைந்தார் திசாரா பெரேரா.

இந்த ஜோடி 4.1 ஓவர்களில் 48 ரன்கள் சேர்க்க, சரிவிலிருந்து மீண்டது சன்ரைஸர்ஸ். 44 பந்துகளில் அரைசதம் கண்ட படேல், 47 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரேரா 19 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது ஹைதராபாத்.

பஞ்சாப் தரப்பில் சந்தீப் சர்மா 4 ஓவர்களில் 21 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.