கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

பிசிசிஐ நிர்வாகத்தில் மீண்டும் இடம்பெற மாட்டேன்

பிசிசிஐ நிர்வாகக் குழுவில் மீண்டும் இடம்பெற மாட்டேன் என்று சஞ்சய் ஜக்டேல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 ஜூன் 2013, 3:49 am IST

பிசிசிஐ நிர்வாகக் குழுவில் மீண்டும் இடம்பெற மாட்டேன் என்று சஞ்சய் ஜக்டேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலக மறுத்ததையடுத்து அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பிசிசிஐ செயலர் பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார் ஜக்டேல்.

இந்த நிலையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியது: பிசிசிஐயின் நிர்வாகக் குழுவில் இடம்பெற ஏதேனும் வாய்ப்புள்ளதா என்றுகூட பார்க்கமாட்டேன். நான் எனக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடித்துவிட்டதாக நினைக்கிறேன். ஐபிஎல் போட்டியில் நடைபெற்றுள்ள ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டங்கள், கிரிக்கெட்டின் புகழுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. எனவே அதைக் கடந்து வருவதற்கு ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் இப்போது பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதிலிருந்து மீண்டு வருவதற்கு சில காலம் ஆகலாம்.

கிரிக்கெட்டில் ஃபிக்ஸிங்கை தடுப்பது கடினமானது. எனினும் அதைத் தடுக்கும் வகையில் பிசிசிஐ கண்காணிப்பை தீவிரப்படுத்தலாம். அதேநேரத்தில் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் வீரர்கள் மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரசிகர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது பிசிசிஐயின் கையில்தான் உள்ளது' என்றார். தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிசிசிஐயை கொண்டு வந்தால் முறைகேடுகளை ஒழிக்க முடியுமா என்று கேட்டபோது, "ஒழிக்க முடியாது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.