சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஆசியப் போட்டி: வீரர்கள் ஜூலை 26-ல் தேர்வு

இளைஞர்களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 26-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.

Updated On :22 ஜூலை 2013, 1:10 am IST

இளைஞர்களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 26-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.

இதற்கான தகுதிப் போட்டிகளை இந்திய தடகள சம்மேளனம் நடத்துகிறது. இது, கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இளைஞர்களுக்கான ஆசியப் போட்டி சீனாவின் நன்ஜிங் நகரில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் வகையில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 30 (18 வயதுக்கு உட்பட்டோர்) வீரர், வீராங்கனைகள், திருவனந்தபுரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களில் 12 பேர், உக்ரைனில் நடைபெற உள்ள இளைஞர்களுக்கான உலக விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.