இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

6 மாதத்துக்குப் பிறகு மீண்டும் பயிற்சி

கடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், 6 மாத காலத்துக்குப் பிறகு மீண்டும் பயிற்சிக்குத் திரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 ஜூலை 2013, 7:39 pm

கடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், 6 மாத காலத்துக்குப் பிறகு மீண்டும் பயிற்சிக்குத் திரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 14-ம் தேதி 3-வது குழந்தைக்கு தாயான மேரி கோம், தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்த இடைவெளியில், அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக மணிப்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியது: தற்போது ஓய்வில் இருக்கிறேன். 6 மாதங்களுக்குப் பிறகு இலகுவான பயிற்சியை மேற்கொண்டு, போட்டியில் பங்கேற்கும் வகையில் உடற்தகுதியைப் பெறுவேன். இதற்கு சுமார் ஓர் ஆண்டு பிடிக்கும். அடுத்த 12 மாதங்களுக்கு பெரிய போட்டிகள் எதுவும் இல்லை.

இதே வழியைத்தான் கடந்த முறை குழந்தை பெற்றெடுத்தபோதும் கடைபிடித்தேன்.

நிறைய சாதித்து விட்டதால் ஓய்வு பெற்று விடுவேன் என்று சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

ஆனால், சாதிக்க வேண்டியது இன்னும் உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இன்னும் தங்கப் பதக்கம் வெல்லவில்லை. 2016-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவு அனுமதிக்கப்பட்டால் கண்டிப்பாக தங்கம் வெல்வேன் என்று தெரிவித்தார்.

மேரி கோம், 5 முறை உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அவருக்கு 2007-ம் ஆண்டு இரட்டைக் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

திரைப்படமாகும் கோமின் வாழ்க்கை

மேரி கோமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. கோமின் கதாபாத்திரத்தில் தேசிய விருது பெற்ற நடிகையான பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார்.

இது குறித்து மேரி கோம் கூறுகையில், "எனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பது குறித்து என்னிடம் லண்டன் ஒலிம்பிக் போட்டியின்போது தெரிவிக்கப்பட்டது. அப்போது இதனை வெறும் நகைச்சுவையாகவே கருதினேன்.

தற்போது அது ஈடேறி வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

முதன்முறையாக மணிப்பூரைச் சேர்ந்தவரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதற்கு நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.