அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-ம் சுற்றில் டென்மார்க்கின் வோஸ்னியாக்கி, செக் குடியரசின் பெட்ரோ க்விட்டோவா ஆகிய வீராங்கனைகள் தோல்வியைத் தழுவினர்.
அதேசமயம், சுவிட்சர்லாந்தின் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடால் மற்றும் டேவிட் ஃபெரர், கனடாவின் மில்ஸ் ரயோனிக் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் 3-வது சுற்றில் வாகை சூடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
இப்போட்டியின் 6-ம் நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவுப் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள வோஸ்னியாக்கியும், இத்தாலியின் கேமிலா ஜியோர்ஜியும் மோதினர். இந்த ஆட்டத்தில் 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவி சோகத்துடன் வெளியேறினார் வோஸ்னியாக்கி.
அதேபோல், போட்டித் தரவரிசையில் 7-ம் இடத்தில் உள்ள க்விட்டோவா 3-6, 0-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கியிடம் வீழ்ந்தார். மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் குஸ்னெட்சோவா 5-7, 1-6 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பெனட்டாவிடம் தோல்வியைத் தழுவினார்.
மற்ற ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகளான செர்பியாவின் அனா இவானோவிச், ருமேனியாவின் சிமோனா ஹலேப், பெலாரஸின் விக்டோரியா அசரென்கா உள்ளிட்ட வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
நடால், ஃபெடரர் வெற்றி: ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் நடால் 6-4, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் இவான் டோடிஜை தோற்கடித்தார். பிரான்ஸின் மன்னரினோவுக்கு எதிரான ஆட்டத்தில் 6-3, 6-0, 6-2 என்ற நேர் செட்களில் ஃபெடரர் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் 6-4, 6-3, 4-6, 6-4 என்ற செட்களில் கஜகஸ்தானின் ககுஷிகினை வீழ்த்தினார்.
போட்டித் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜான்
இஸ்னெர் 4-6, 6-3, 5-7, 6-7 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் கோல்ஷீரபெரிடம் தோற்றார்.
3-வது சுற்றில் இந்திய வீரர்கள்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவிலான 2-வது சுற்று ஆட்டம் இந்திய வீரர்களுக்கு நன்றாக அமைந்தது.
சனிக்கிழமை நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பயஸ், துவிஜ் சரண் மற்றும் ரோகன் போபண்ணா ஆகிய ஜோடிகள், 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். மகளிர் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்ட சானியா மிர்சாவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சனிக்கிழமை நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் பயஸ்-ஸ்டீபனெக் ஜோடி 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் டேனியல் பிராண்ட்ஸ்-ஆஸ்திரியாவின் ஃபிலிப் ஆஸ்வால்ட் ஜோடியை வீழ்த்தியது.
இந்த ஆட்டம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த ஜோடி, தங்களது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸின் மைக்கேல் லோட்ரா-நிகோலஸ் மாஹட் ஜோடியை எதிர்கொள்கிறது.
மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள போபண்ணா-பிரான்ஸின் ரோஜர் வேஸ்ஸலின் ஜோடி 7-6, 7-6 என்ற நேர் செட்களில் ரஷியாவின் நிகோலய் டவிடென்கோ-மிகலி எல்ஜின் ஜோடியை தோற்கடித்தது.
தனது 2-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபனில் சீன தைபேவின் யென்-சன் லூவுடன் இணைந்து விளையாடி வருகிறார் இந்தியாவின் துவிஜ் சரண். இந்த ஜோடி 2-வது சுற்றில் 6-4, 5-7, 7-6 என்ற செட்களில் இஸ்ரேலிய ஜோடியை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தது.
சானியா வெற்றி: மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சானியா மிர்ஸா-சீனாவின் ஜி ùஸங் ஜோடி 6-3, 7-5 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மரோஸி-மெüல்டன் லேவி ஜோடியை தோற்கடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நங்கவள்ளியில் தீயில் கருகி தொழிலாளி உயிரிழப்பு
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

கொலை வழக்கில் 17 வயது சிறுவனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


