தேசிய ஜூனியர் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற 6 பேர் ஊக்கமருந்து சோதனைக்கு சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை தர மறுத்ததால், இந்திய மல்யுத்த சம்மேளனம் அவர்களின் பதக்கங்களை பறித்துள்ளது.
சண்டீகரில் கடந்த 9 முதல் 12-ம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற ராகுல் பால் (84 கிலோ எடைப் பிரிவு), அமித் (74 கிலோ), சுநீல் குமார் (120 கிலோ) சந்தீப் (60 கிலோ), அனூப் (84 கிலோ), மஞ்ஜீத் (84 கிலோ) ஆகியோர் போட்டி முடிந்த பிறகு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பிடம் சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை தர மறுத்துள்ளனர். இதையடுத்து மல்யுத்த சம்மேளனம் பதக்கங்களை பறித்துள்ளது.
இது தொடர்பாக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பதக்கம் வென்றவர்கள் சிறுநீர் உள்ளிட்ட மாதிரிரிகளை வழங்காமல் உடனடியாக மைதானத்தில் இருந்து புறப்பட்டு சென்றது துரதிருஷ்டவசமானது. இது தொடர்பாக சம்மேளனத் தலைவருடன் ஆலோசனை நடத்திய பிறகு சம்பந்தப்பட்ட வீரர்களிடம் இருந்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வீரர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும். அந்த விசாரணை முடிந்த பிறகு இறுதி முடிவெடுக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


