இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் மேட்சின்போது கேட்ச் பிடிக்க முயற்சி செய்த இரு வீரர்கள் பலமாக மோதிக்கொண்டதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் கிரிக்கெட் மேட்ச் 18.4 ஓவர்களில் உடனே நிறுத்தப்பட்டது.
இங்கிலாந்து அருண்டேலில் நடந்த கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே - சசக்ஸ் அணிகள் மோதின. 19-வது ஓவரின்போது ஸ்டீஃபன் பியோலெட் அடித்த பந்தை டீப் கவரில் இருந்து சர்ரே அணியைச் சேர்ந்த ராரி பர்ன்ஸூம் பாயிண்ட் பகுதியில் இருந்து ஹென்ரிகஸூம் கேட்ச் பிடிக்க முயன்றபோது அந்த விபரீதம் நடந்தது. பந்தைப் பிடிக்கும் மும்முரத்தில் இருந்ததால் ஒருவரையொருவர் கவனிக்காமல் பலமாக மோதிக்கொண்டார்கள். இருவரும் கீழே விழுந்து சில நிமிடங்கள் நினைவில்லாமல் அப்படியே கீழே விழுந்து கிடந்தார்கள். பர்ன்ஸூக்கு முகத்திலும் ஹென்ரிகஸூக்குத் தாடையிலும் அடிபட்டன.
உடனே வீரர்களும் மருத்துவர்களும் உதவிக்கு வந்தார்கள். மூன்று ஆம்புலன்ஸ்கள் மைதானத்துக்கு நுழைந்தன. சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு வந்த ஹென்ரிகஸூம் பர்ன்ஸூம் தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இந்தப் போட்டியைக் காண வந்த 8,500 கிரிக்கெட் ரசிகர்களும் இதனால் பதற்றமடைந்தார்கள். வீரர்களுக்குப் பெரிதளவில் காயம் ஏற்படக்கூடாது என்று வேண்டிக்கொண்டார்கள். இரண்டாவது ஆம்புலன்ஸ் பர்ன்ஸை அழைத்துச் சென்றபிறகு, போட்டி நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
பிலிப் ஹியூஸ் மரணத்துக்குப் பிறகு இதுபோன்ற எந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும் கிரிக்கெட் உலகில் பரபரப்பு ஏற்பட்டுவிடுகிறது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த உள்ளூர் போட்டியில் அங்கித் கேஷ்ரி என்கிற பெங்கால் வீரர், இதேபோன்று ஃபீல்டிங் செய்தபோது சகவீரருடன் மோதி பலத்த காயத்துக்கு ஆளானார். பிறகு மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.
நல்லவேளையாக ஹென்ரிகஸூம் பர்ன்ஸூம் உடல்நலம் தேறி வருகிறார்கள். முகத்தில் காயம்பட்ட பர்ன்ஸ் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாடையில் பலத்த காயம்பட்ட ஹென்ரிகஸ் இன்னும் ஒருநாள் மருத்துவமனையில் இருப்பார், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







(படங்கள்: ஸ்கைஸ்போர்ட்ஸ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

