"பயஸும், சானியாவும் முன்மாதிரியாக விளங்குகின்றனர்'
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளான

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளான லியாண்டர் பயஸ், சானியா மிர்ஸா ஆகிய இருவரும் முன்மாதிரியாக விளங்குகின்றனர் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் பாராட்டினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
முன்மாதிரியானவர்கள்: இதேபோல, மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா சார்பில் யு.எஸ். ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பயûஸயும், சானியாவையும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் பாராட்டியுள்ளார்.
ஹாக்கி கர்நாடகா அமைப்பு சார்பில் 2-ஆவது பெங்களூரு கோப்பை போட்டி அறிவிப்பு நிகழ்ச்சி பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் ராகுல் திராவிட் கூறியதாவது:
சானியா, பயஸ் இருவரும் டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமின்றி விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் அனைத்துத் தரப்பினர்களுக்கும் மிகப்பெரிய முன்மாதிரியானவர்கள். அவர்களின் வெற்றி மிகப்பெரிய சாதனையாகும். இந்த வயதிலும் லியாண்டர் பயஸ் (42), வெற்றியை வசப்படுத்தியிருப்பது வியக்கத்தக்கதாகும். அவர் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறார். அவரை நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்திய ரசிகராக..: மகளிர் பிரிவில் சானியாவும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இளைஞர்களும், யுவதிகளும் பின்தொடரும் வகையில் அவரது சாதனைகள் உள்ளன. பயஸ், சானியா ஆகியோரின் போட்டிகளை தொலைக்காட்சியில் இந்திய ரசிகராக நான் பார்த்தேன். அவை மிகவும் விரும்பத்தக்க வகையில் இருந்தன என்றார் திராவிட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

