ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு திமுகவும் அதிமுகவும் எந்த காலத்திலும் இணையாது: டிடிவி தினகரன்கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி மேயர் பிரியாவை புறக்கணிக்கவில்லை: ராஜ்மோகன் பதில்!ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

யு.எஸ். ஓபன் ஆடவர் இறுதிச் சுற்று: 10-ஆவது கிராண்ட் ஸ்லாம் வென்றார் ஜோகோவிச்

யு.எஸ். ஓபன் ஆடவர் இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி, தனது 10-ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.

Updated On :

யு.எஸ். ஓபன் ஆடவர் இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி, தனது 10-ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.
 யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் 2-ஆவது இடத்திலுள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை எதிர்கொண்டார்.
 கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 3 மணிநேரம் தாமதமாகத் தொடங்கியது. போட்டியின் முடிவில், 6-4, 5-7, 6-4, 6-4 என்ற நேர் செட்டுகளில் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இது அவருக்கு 2-ஆவது யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டமாகும். இந்த ஆண்டில் 3-ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டமும், ஒட்டுமொத்தத்தில் 10-ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டமுமாகும்.
 தவறிய பிரெஞ்சு ஓபன்: இந்த சீசனில் ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவைத் தோற்கடித்தார். அதன் பிறகு ஜூன் மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவிடம் தோல்வியைத் தழுவினார். ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஃபெடரரை வீழ்த்தினார். தற்போது யு.எஸ். ஓபன் போட்டியிலும் சாம்பியனாகி உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டிலும் ஜோகோவிச், இதேபோன்று 3 போட்டிகளில் சாம்பியனாகி இருந்தார்.
 வெற்றிக்குப் பின்னர் ஜோகோவிச் கூறுகையில், "ஃபெடரர் மீது நான் மிகப் பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அதேபோன்று என்னுடனும், இதர வீரர்களுக்கு எதிராகவும் அவர் வெளிப்படுத்தும் ஆட்டத்தின் மீதும் மதிப்பு கொண்டிருக்கிறேன்' என்றார்.
 மிகப் பெரிய சவால்: 34 வயதாகும் ரோஜர் ஃபெடரர், தனது 18-ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை எதிர்நோக்கி இருந்தார். ஆனால், ஜோகோவிச்சின் ஆதிக்கத்தை அவரால் முறியடிக்க இயலவில்லை. போட்டிக்குப் பின்னர் ஃபெடரர் கூறுகையில், "ஜோகோவிச் போன்ற பெரிய சாம்பியன்களுக்கு எதிராக விளையாடுவது என்பது மிகப்பெரிய சவாலாகும்' என்றார். ஃபெடரர் கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் கிராண்ட் ஸ்லாம் வென்றார்.
ஜோகோவிச்சின் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்:
 ஆஸ்திரேலிய ஓபன் 5
 விம்பிள்டன் 3
 யு.எஸ். ஓபன் 2
 மொத்தம் 10
"ஃபெடரர் மீது நான் மிகப் பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அதேபோன்று என்னுடனும், இதர வீரர்களுக்கு எதிராகவும் அவர் வெளிப்படுத்தும் ஆட்டத்தின் மீதும் மதிப்பு கொண்டிருக்கிறேன்."
 - ஜோகோவிச்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.