9-ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் பல இந்திய வீரர்கள் நல்ல தொகைக்கு ஐபிஎல் அணிகளால் வாங்கப்பட்டார்கள். இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத நெகி, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், டெல்லி அணி அவரை ரூ.8.5 கோடிக்கு வாங்கியது (அவருடைய அடிப்படை விலை ரூ.30 லட்சம்). இதுபோன்று பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பல சுவாரசியங்கள் நடைபெற்றன.
இந்த ஏலத்தில் மொத்தம் 351 பேர் பங்கேற்றனர். அதில் 94 பேர் 8 அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். குஜராத் அணி அதிகபட்சமாக 19 பேரையும், புணே அணி 18 பேரையும், பெங்களூர் அணி 11 பேரையும், ஹைதராபாத் அணி 10 பேரையும், டெல்லி அணி 14 பேரையும், மும்பை, கொல்கத்தா அணிகள் தலா 7 பேரையும், பஞ்சாப் அணி 8 பேரையும் வாங்கியது.
சரி, இந்த ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர்களின் நிலை என்ன?
(இவர்களில் சிலர் உள்ளூர் போட்டிகளில் வேறு அணிக்கு மாறிவிட்டார்கள்)
ஏற்கெனவே ஐபிஎல் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்கள்
முரளி விஜய் - கிங்ஸ் X1 பஞ்சாப் - ரூ. 3 கோடி
ஆர். அஸ்வின் - ரைசிங் புணே சூப்பர்ஜியண்ட்ஸ் - ரூ. 7.50 கோடி
ஏலம் போன தமிழக வீரர்கள்
தினேஷ் கார்த்திக் - குஜராத் லயன்ஸ் - 2.30 கோடி
எம். அஷ்வின் - ரைசிங் புணே சூப்பர்ஜியண்ட்ஸ் - ரூ. 4.50 கோடி
விஜய் சங்கர் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - ரூ. 35 லட்சம்
ராஜகோபால் சதீஷ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 20 லட்சம்
பாபா அபரஜித் - ரைசிங் புணே சூப்பர்ஜியண்ட்ஸ் - ரூ. 10 லட்சம்
ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படாத தமிழக வீரர்கள்
எஸ். பத்ரிநாத் ( அடிப்படை விலை - ரூ. 50 லட்சம்)
அபினவ் முகுந்த் - (ரூ. 30 லட்சம்)
அஸ்வின் கிரிஸ்ட் - (ரூ. 10 லட்சம்)
ரஹில் ஷா (ரூ. 10 லட்சம்)
அருண் கார்த்திக் (ரூ. 10 லட்சம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


