டான் பிராட்மேனின் பேட்டிங் சராசரியை (99.94) ஒருவரால் மிஞ்ச முடியுமா? இத்தனை வருட காலமாக முடியாது என்றுதான் பதில் சொல்லப்பட்டு வந்தது.
ஏன் முடியாது, அது சாத்தியமே என்று உணர்த்துகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் வோஜஸின் பேட்டிங் சராசரி!
ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 176 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார் வோஜஸ்.
இதன்படி தன்னுடைய 19-வது டெஸ்ட் இன்னிங்ஸில் 100.33 ரன்களை பேட்டிங் சராசரியைக் கொண்டுள்ளார் வோஜஸ். 80 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஆடியபிறகும் 99.94 பேட்டிங் சராசரியை வைத்திருந்தார் பிராட்மேன். என்றாலும் வோஜஸின் இந்தச் சாதனையையும் கிரிக்கெட் உலகம் மெச்சத்தக்கதாகவே பார்க்கிறது. உதாரணமாக டெஸ்ட் போட்டியில் குறைந்தபட்சம் ஆயிரம் ரன்கள் எடுத்தவர்களில் அதிக பேட்டிங் சராசரி கொண்டவராக வோஜஸ் உள்ளார் (வோஜஸ் - 100.33, பிராட்மேன் - 99.94, சிட்னி பார்னஸ் - 63.05).
தன் வாழ்நாளில் இதுபோல 15 முறை பேட்டிங் சராசரியாக 100 ரன்களைக் கொண்டிருந்தார் பிராட்மேன். தன்னுடைய 15-வது டெஸ்ட் போட்டியில் முதல்முதலாக அவருக்கு பேட்டிங் சராசரியாக 100 ரன்கள் கிடைத்தன. தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டிக்கு முந்தைய டெஸ்டிலும் பேட்டிங் சராசரி 100-ஐத் தாண்டியிருந்தது. அதிகபட்சமாக தன்னுடைய 18-வது டெஸ்ட் போட்டியில் 299* ரன்கள் எடுத்திருந்தபோது பிராட்மேனின் பேட்டிங் சராசரி - 112.29 ஆக இருந்தது. மேலும் இது வோஜஸின் 14-வது டெஸ்ட் போட்டி. தன்னுடைய முதல் 14-வது டெஸ்ட் போட்டியின்போது மூன்று இரட்டைச் சதங்கள் உள்ளிட்ட எட்டு சதங்களை எடுத்திருந்தார் பிராட்மேன். வோஜஸ், ஒரு இரட்டைச் சதம் உள்ளிட்ட 5 சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
எனவே பிராட்மேனின் மேதமையின் முன்னால் வோஜஸ் எந்தளவுக்கு சரிசமமாக நிற்பார் என்று சொல்வதற்கு இன்னும் காலமிருக்கிறது. எனினும் இந்தக் காலத்திலும் டெஸ்ட் பேட்டிங் சராசரியாக 100 ரன்கள் இருப்பது சாத்தியமே என்று அவர் நிரூபித்துள்ளார்.
சமீபகாலங்களில் எக்கச்சக்கமாக ரன்கள் எடுத்தது மட்டுமில்லாமல் நிறைய நாட் அவுட் வேறு. கடைசி இரண்டு இன்னிங்ஸ்களில் 269*, 106*. இப்போது 176*. அதாவது டெஸ்ட் போட்டியில் 551 ரன்கள் எடுத்து இதுவரை ஆட்டமிழக்காமலேயே உள்ளார். இது ஓர் உலக சாதனை. இதனாலேயே அவருடைய பேட்டிங் சராசரி நூறைத் தாண்டியுள்ளது. (இதற்கு முன்னால் ஆட்டமிழக்காமல் அதிக ரன்கள் எடுத்தவர், சச்சின். 497 ரன்கள்: 241*, 60*, 194*, 2)
இந்தச் சாதனையை அடுத்து புதிய பிராட்மேன் என்று வோஜஸைப் பலரும் அழைக்கத் தொடங்கியுள்ளார்கள். அல்லது சர் வோஜஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


