திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அதிரடியால் பெங்களூரு வெற்றி 

ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் சிறப்பாக பந்து வீசி வந்த நிலையில், ஷாபாஸ், தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

News image
தினேஷ் கார்த்திக், ஷாபாஸ்
Updated On :5 ஏப்ரல் 2022, 6:09 pm

DIN

ஐபிஎல் போட்டியின் 13வது ஆட்டம் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.  இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஜெய்ஸ்வால் 6 பந்துகளில் வெளியேற அதற்கடுத்து வந்த படிக்கல், ஜோஸ் பட்லருடன் நிலைத்து ஆடினார். இதனால் படிக்கல் 29 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். அதனைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 8 ரன்களில் வெளியேற அதற்கடுத்து வந்த ஷிம்ரோன் ஹிட்மயர், பட்லருடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ஆரம்பம் முதலே நிலைத்து ஆடிவந்த ஜோஸ் பட்லர் அரை சதம் கடந்து அணியின் ரன் வேகத்தைக் கூட்டினார். அவர் 47 பந்துகளில் 70 ரன்களைக் குவித்தார். ஹிட்மயர் 31 பந்துகளுக்கு 42 ரன்களை சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. இதனால் பெங்களூரு அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான டூ பிளெசிஸ், ராவத் ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும், டூ பிளெசிஸ் 29 ரன்களிலும் ராவத் 26 ரன்களிலும் தங்களின் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர், வந்த கோலி 5 ரன்களிலும் வில்லி ரன் ஏதும் எடுக்காமலும் ரூதர்போர்டு 5 ரன்களிலும் வெளியேறினர். 

இதனால், ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் சிறப்பாக பந்து வீசி வந்த நிலையில், ஷாபாஸ், தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 26 பந்துகளை எதிர்கொண்ட 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இருப்பினும், நிலைத்து நின்று ஆடிய தினேஷ் கார்த்திக் பெங்களூருக்கு அணிக்கு வெற்றியை தேடி தந்தார். 5 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டி பெங்களூரு அணி வெற்றிபெற்றது. 

ராஜஸ்தான் அணிக்காக போல்ட், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.