சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஐசிசி சிறந்த வீரர் விருது

ஜூன் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது ஆடவர் பிரிவில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கும், பெண்கள் பிரிவில் தென்னாப்பிரிக்க வீரர் மரிஜோன் கப்புவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2022, 4:08 pm

DIN

ஜூன் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது ஆடவர் பிரிவில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கும், பெண்கள் பிரிவில் தென்னாப்பிரிக்க வீரர் மரிஜோன் கப்புவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றிப் பெற பேர்ஸ்டோ மிகவும் உதவியாக இருந்தார். கடைசி போட்டியில் கூட 162, 71 ரன்களை எடுத்தார். இந்த வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவரும் இவரே. 

பெண்களுக்கான பிரிவில் தென்னாபிரிக்கவை சார்ந்த மரிஜோன் கப் தேர்வு செய்யப்பட்டு இருந்தார் எனப்தும் குறிப்பிடத்தக்கது. 

ஜோ ரூட், டேரில் மிட்செல் ஆகியோரும் ஜூலை மாதத்தில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஜானி பேர்ஸ்டோ கூறியது: 

ஐசிசி ஆண்கள் பிரிவில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுக்க வாக்களித்த் ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது அணியினர் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளனர். 4-0 என வெற்றிப் பெற்றுள்ளோம். நியூசிலாந்து, இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக இந்த வெற்றிகள் என்பது மிகுந்த மகிழச்சியளிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.