மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 4 டி20 தொடர்களை வென்ற இந்திய அணி

இங்கிலாந்து அணிக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய 4 டி20 தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2022, 11:08 am

DIN

இங்கிலாந்து அணிக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய 4 டி20 தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

நாட்டிங்கமில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. மலான் 77, லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சூர்யகுமார் யாதவ் அற்புதமான ஷாட்களை வெளிப்படுத்தி சதமடித்தார். 55 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டாப்லி 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

டி20 தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. தொடர் நாயகன் விருதை புவனேஸ்வர் குமார் வென்றார். 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. 

இங்கிலாந்து அணிக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய 4 டி20 தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து: கடைசி 4 டி20 தொடர்கள் 

2017 - இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இந்தியா வெற்றி (2-1)
2018 - இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் இந்தியா வெற்றி (2-1)
2021 - இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இந்தியா வெற்றி (3-2)
2022 - இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் இந்தியா வெற்றி (2-1)

2017-லிருந்து இந்தியாவும் மே.இ. தீவுகளும் மட்டுமே டி20 தொடரில் இங்கிலாந்தைத் தோற்கடித்துள்ளன. 2017 மற்றும் இந்த வருடம் நடைபெற்ற டி20 தொடர்களில் இங்கிலாந்தை மே.இ. தீவுகள் அணி தோற்கடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.