எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இரண்டாவது டெஸ்ட்: பாகிஸ்தான் திணறல்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. 

News image
Updated On :25 ஜூலை 2022, 3:55 pm

DIN

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. 

முதல் டெஸ்டில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியிடம் தோற்றது. இரண்டாம் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 378 ரன்களை எடுத்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக அஹா சல்மான் 62 ரன்களை எடுத்தார். இமாம் உல் ஹக் 32 ரன்களும், ரிஷ்வான் 24 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். பிரதாப் ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார். பெர்னாண்டோ, தனஜெயா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். யசிர் ஷா 12 ரன்னுடன் களத்தில் இருந்தார். சல்மான் ஆட்டமிழந்ததும் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 191 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. இலங்கை அணியை விட 187 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.