பாகிஸ்தான் சாதனையை முறியடித்த இந்திய அணி
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து அதிகபட்ச வெற்றிகள் பெற்று பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடித்து சாதனையைப் படைத்துள்ளது.
ஞாயிற்றுகிழமை நடைபெற்ற போட்டியில் கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களை அடித்து இந்திய அணி 312 ரன்களை சேஸிங் செய்து த்ரில் வெற்றி பெற்றது. 35 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அக்ஷர் பட்டேல் அபாரமாக ஆடி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
இதன் மூலம் இந்திய அணி மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக தொடர்ந்து 12 முறை வெற்றி பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளது. இதற்குமுன் பாகிஸ்தான் அணி 11 முறை தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச தொடர் வெற்றிகள் கொண்ட அணிகளின் பட்டியல் விவரம்:
- 12 வெற்றிகள் - இந்தியா - மே.இ.தீவுகள் (2007-2022)
- 11 வெற்றிகள் - பாகிஸ்தான் - ஜிம்பாப்வே (1996-2021)
- 10 வெற்றிகள் - பாகிஸ்தான் - மே.இ.தீவுகள் (1999-20222)
- 9 வெற்றிகள் - தென்னாப்பிரிக்கா- ஜிம்பாப்வே (1995-2008)
- 9 வெற்றிகள் - இந்தியா -இலங்கை (2007-2021)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

