ராகுல், ஹூடா சரவெடி: தில்லி அணிக்கு 196 ரன்கள் இலக்கு

23 ரன்கள் எடுத்திருந்த டி காக் ஆட்டமிழந்தபோதும், பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல், ஹூடா தில்லி அணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர்.
லக்னெள அணி வீரர்கள் ராகுல், ஹூடா
லக்னெள அணி வீரர்கள் ராகுல், ஹூடா

ஐபிஎல் தொடரின் 45ஆவது போட்டியில் டாஸ் வென்ற லக்னெள அணி கேப்டன் கே. எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தில்லி அணிக்கு எதிரான இந்த போட்டியில் லக்னெள அணியின் வேகபந்து வீச்சாளர் அவேஷ் கானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கிருஷ்ணப்பா கெளதம் சேர்க்கப்பட்டிருந்தார். தில்லி அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

லக்னெளவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக்கும் ராகுலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 23 ரன்கள் எடுத்திருந்த டி காக் ஆட்டமிழந்த போதும், பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல், ஹூடா தில்லி அணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர்.

அரைசதம் எடுத்த ஹூடா தனது விக்கெட்டை பறிகொடுத்தாலும், ராகுல் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் ஆடினார். 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

20 ஓவர்கள் முடிவில், மூன்று விக்கெட் இழப்புக்கு லக்னெள அணி 195 ரன்களை எடுத்தது. தில்லி அணி சார்பாக ஷர்துல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்கை நோக்கி தில்லி அணி களமிறங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com