மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஜிம்பாப்வே, நியூசிலாந்து தொடருக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு 

ஜிம்பாப்வே, நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி வீரர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2022, 12:07 pm

ஜிம்பாப்வே, நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி வீரர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. 

டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ்க்கு இந்த இரண்டு தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டிராவிஸ் ஹெட் தனது குழந்தையைப் பார்க்க சென்றிருப்பதால் அவரும் இந்த தொடர்களில் கலந்துக் கொள்ளப்படமாட்டார். 

ஆஸ்திரேலியாவின் தேசிய அணித் தேர்வர் ஜியார்ஜ் பெய்லி, “உலகின் நம்பர் ஒன் அணி நியூசிலாந்து அணியுடனும், ஜிம்பாப்வே அணியுடனும் விளையாட இருப்பது சுவாரசியமாக இருக்கும்” எனத் தெரிவித்தார். 

ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயுடன் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வரை விளையாடும். அடுத்து, செப்டம்பர் 6 முதல் 11வரை நியூசிலாந்து அணியுடனும் விளையாட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்: ஆரோன் பின்ச், சேன் அப்பாட், அஸ்டன் ஏகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், மார்னஸ் லபுசேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.