இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்டிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியுடன் கே.எல்.ராகுல் இணையவில்லை.
கே.எல்.ராகுல் (கோப்புப்படம்)
கே.எல்.ராகுல் (கோப்புப்படம்)

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

கே.எல்.ராகுல் (கோப்புப்படம்)
விராட் கோலி அணியில் இல்லாதது இங்கிலாந்துக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு: இங்கிலாந்து முன்னாள் வீரர்

இந்த நிலையில், காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியுடன் கே.எல்.ராகுல் இணையவில்லை. ரவீந்திர ஜடேஜா அணியினருடன் இணைந்துள்ளார். போட்டியில் விளையாடும் அளவிற்கு கே.எல்.ராகுல் உடல் தகுதியுடன் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் (கோப்புப்படம்)
ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்!

கே.எல்.ராகுலுக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. உடல் தகுதியின் அடிப்படையில் கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறுவர் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com