டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் நாளை மறுநாள் (மார்ச் 5) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது குறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.
இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: மனதளவில் போட்டியில் சிறப்பாக செயல்பட தயாராக இருக்கிறாரா என்பதை அணி நிர்வாகம் அவருடன் பேச வேண்டும். தொடக்க ஆட்டக்காரராக இஷான் கிஷனை களமிறக்கலாம். ஆனால், அபிஷேக் சர்மாவின் மீது நம்பிக்கை இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் அபாரமாக விளையாடியிருக்கிறார்.
வான்கடே திடலில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடியுள்ளதையும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் வான்கடேவில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். மிகப் பெரிய சதத்தினை அவர் வான்கடேவில் விளாசியுள்ளார் என்றார்.
கடந்த ஆண்டு வான்கடேவில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Ravi Shastri has spoken about Abhishek Sharma playing in the semi-final match against England in the T20 World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2 கோல்கள் அடித்த நெய்மர்..! கொண்டாட்டத்தின் மூலமாக விமர்சனங்களுக்கு பதிலடி!

சொல்லி அடித்த ஸ்பெயின்..! வைரலாகும் பெட்ரி, யமாலின் பழைய பதிவுகள்!

2-வது டி20: அபிஷேக் சர்மா அசத்தல்; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு!








