உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சொல்லி அடித்த ஸ்பெயின்..! வைரலாகும் பெட்ரி, யமாலின் பழைய பதிவுகள்!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதை முன்பே கணித்த ஸ்பெயின் வீரர்களின் பழைய பதிவுகள் குறித்து...

A photo shared by Spanish footballers after their defeat in the 2025 Nations League final.

ஸ்பெயின் கால்பந்து வீரர்கள் 2025 நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டி தோல்விக்குப் பிறகு பகிர்ந்த புகைப்படம். - படம்: இன்ஸ்டா / பெட்ரி.

Published On :

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதை முன்பே கணித்த ஸ்பெயின் வீரர்களின் பழைய பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன.

அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-0 என பிரான்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடைசியாக 2010ல் உலகக் கோப்பையை வெல்லும்போது ஸ்பெயின் இறுதிப் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு (ஜூன் 10, 2025) யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி போர்ச்சுகல் உடன் 2-2 என சமன்படுத்தியது. பின்னர், பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் 3-5 என தோல்வியுற்றது.

இந்தப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் அணியின் மிட்ஃபீல்டர் பெட்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடன் லாமின் யமால், நிகோ வில்லியம்ஸ் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ”19 07 26” எனப் பதிவிட்டிருந்தார்.

பெட்ரியின் பழைய இன்ஸ்டா பதிவு.

பெட்ரியின் பழைய இன்ஸ்டா பதிவு. - படம்: இன்ஸ்டா / பெட்ரி.

கால்பந்து உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஜூலை 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அப்போது தோற்றிருந்தாலும் நாம் உலகக் கோப்பை இறுதியில் விளையாடுவோம் என நம்பிக்கையுடன் அந்தப் பதிவை பதிவிட்டிருந்தார். அதனை லாமின் யமால் தனது ஸ்டோரியில் மறுபதிவிட்டிருந்தார். தற்போது, அந்த நம்பிக்கை 13 மாதங்களுக்குப் பிறகு நிஜமாகிவிட்டது.

சமூக வலைதளங்களில் ’manifestation’ என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகி வருகிறது. நோக்கம் அல்லது லட்சயம் ஒன்றை அடைவோம் என முன்னதாகவே எழுதி வைப்பதுதான் இவ்வாறு அழைக்கப்படுகிறது. தற்போது, இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

அரையிறுதிக்கு முன்பாகவும் லாமின் யமால். “பிரான்ஸ் அணி எங்களைப் பார்த்து பயப்படும். நாங்கள் அவர்களை கடைசி இரண்டு முறை வீழ்த்தியிருக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.

அரையிறுதிப் போட்டியில் லாமின் யமால் கோல் அடிக்காவிட்டாலும் முதல் கோல் அடிக்க பெனால்டி வாய்ப்பு அவர்தான் உருவாக்கி கொடுத்தார். பெட்ரி இந்தப் போட்டியில் கடைசியில்தான் மாற்று வீரராக களமிறங்கினார். 7 போட்டிகளில் 6 போட்டிகளில் க்ளீன்ஷீட்டுகளைப் பெற்று, ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி ஆர்ஜென்டீனா அல்லது இங்கிலாந்துடன் ஜூலை 19ஆம் தேதி மோதவிருக்கிறது.

Summary

How Pedri and Lamine Yamal manifested Spain's World Cup final into existence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.