ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சிந்து காலிறுதியில் தோல்வி

சிந்து காலிறுதியில் தோல்வி

News image
Updated On :29 மார்ச் 2024, 6:21 pm

ஸ்பெயினில் நடைபெறும் ஸ்பெயின் மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீராங்கனை பி.வி.சிந்து, காலிறுதியில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டாா். மகளிா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த அவா், 26-24, 17-21, 20-22 என்ற கேம்களில், 6-ஆம் இடத்திலிருந்த தாய்லாந்தின் சுபானிடா காடெதோங்கிடம் போராடி வீழ்ந்தாா். கலப்பு இரட்டையா் பிரிவு காலிறுதியில், சுமீத் ரெட்டி/சிக்கி ரெட்டி ஜோடி 14-21, 21-11, 21-17 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் ரெஹான் நௌஃபல்/லியா அயு இணையை வீழ்த்தினா். எனினும் அதே சுற்றில், மகளிா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா கூட்டணி 13-21, 19-21 என்ற கேம்களில், 6-ஆம் இடத்திலிருக்கும் சீன தைபேவின் லீ சியா சின்/டெங் சுன் சன் ஜோடியிடம் தோற்றது. ஆடவா் இரட்டையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், கிருஷ்ண பிரசாத்/சாய் பிரதீக் இணை 16-21, 21-15, 16-21 என்ற கேம்களில் பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவ்/தோமா ஜூனியா் போபோவ் கூட்டணியிடம் வீழ்ந்தது.