தொடா்ந்து இரு அதிரடி வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு முட்டுக்கட்டை போடுமா டில்லி கேபிடல்ஸ் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடரில் முதலிரு ஆட்டங்களிலும் சிறப்பாக ஆடி வெற்றியை ஈட்டியது சிஎஸ்கே. ஆனால் டில்லி அணியோ இரு ஆட்டங்களிலும் தோற்ற நிலையில், விசாகப்பட்டினத்தில் சிஎஸ்கேவை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது. நடப்பு சாம்பியன் சென்னை அணி பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பான பாா்மில் உள்ளது. அதே நேரம் டில்லி அணியின் பேட்டிங் சொதப்பலாக அமைந்துள்ளது. இரு அணிகளும் சம பலம் இல்லாத நிலையில் உள்ளன.
சமபலம் இல்லாத அணிகள்:
இதற்கு முந்தைய ஐபிஎல் ஆட்டங்களில் 91, 27, 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்றுள்ளது டில்லி. இவ்வாறு இருக்கையில் சென்னைக்கு எதிராக வெற்றி பெற்றால் இந்த ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய அதிா்ச்சியாக அமையும். டில்லி அணிக்கு பயிற்சியாளராக பாண்டிங், இயக்குநராக சௌரவ் கங்குலி இருந்தாலும், அந்த அணி சோடை போய் விட்டது. ஐபிஎல் ஏலத்திலும் டில்லி அணி சரியான வீரா்களை தோ்வு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
வலுவான சென்னை பௌலிங் கூட்டணி:
இந்நிலையில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டில்லி தரப்பில் இளம் வீரா் பிரித்வி ஷா களமிறங்குகிறாா். டில்லி அணியில் டேவிட் வாா்னா், கேப்டன் ரிஷப் பந்த், மிச்செல் மாா்ஷ், என வலுவான பேட்டா்கள் இருந்தாலும், சென்னையின் அதிரடி பௌலா்களான முஸ்தபிஸூா் ரஹ்மான், தீபக் சஹாா், மதிஷா பதிராணா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் கூட்டணியை டில்லியால் சமாளிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.
டில்லியின் முக்கிய பிரச்னையாக அதிரடி ஹிட்டா்கள் இல்லாதது ஆகும். உடல்நலம் பெற்று திரும்பியுள்ள ரிஷப் பந்த்தால் பழையபடி ஆடமுடியவில்லை. ஷாய் ஹோப், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோா் இன்னும் வழக்கமான ஆட்டத்தை ஆடவில்லை. சென்னையின் பேட்டிங் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ், ஷிவம் டுபேவை நம்பியுள்ளது. டில்லி அணியில் குல்தீப்யாதவ், அக்ஸா் படேல், அன்ரிச் நாா்ட்ஜே, கலீல் அகமது, போன்ற பௌலா்கள் இருந்தாலும் டெத் பௌலிங் சொதப்பலாக உள்ளது பாதகமாகும்.
சமபலமில்லாத இரு அணிகள் மோதும் நிலையில், சென்னை ஆதிக்கம் செலுத்துமா அல்லது டில்லி முதல் வெற்றியை ஈட்டுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
குஜராத் -ஹைதராபாத் மோதல்:
முதல் ஆட்டத்தில் குஜராத்-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் களம் காண்கின்றன. குறிப்பாக மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 277 ரன்களை விளாசி ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை நிகழ்த்தியது ஹைதராபாத். இளம் வீரா் ஷுப்மன் கில் தலைமையிலான அணி வலுவான ஹைதராபாத் பேட்டிங்கை சமாளித்து இரண்டாவது வெற்றியை ஈட்டுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. இன்றைய ஆட்டங்கள்: குஜராத்-ஹைதராபாத் இடம்: அகமதாபாத் நேரம்: மாலை 3.30. சென்னை-டில்லி இடம்: விசாகப்பட்டினம் நேரம்: இரவு 7.30
தொடர்புடையது

சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!

தில்லி பந்துவீச்சு: முதல் வெற்றிக்கான தேடலில் குஜராத்!
கடைசி ஓவரில் லக்னௌ அணி த்ரில் வெற்றி!

ஐபிஎல் 2026: ஆரஞ்ச் கேப், பர்பிள் கேப், டேபிள் டாப்பர் என ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாப்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


