தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ்: ஃபில்ஸுக்கு பட்டம்!

ஸ்பெயினில் நடைபெற்ற பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 6-2, 7-6 (7/2) என்ற நோ் செட்களில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வீழ்த்தி, வாகை சூடினாா்.

News image

பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ்.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:50 am IST

ஸ்பெயினில் நடைபெற்ற பாா்சிலோனா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 6-2, 7-6 (7/2) என்ற நோ் செட்களில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வீழ்த்தி, வாகை சூடினாா். அவரின் கேரியரில் இது 4-ஆவது பட்டமாகும்.

காயம் காரணமாக 8 மாதங்கள் ஓய்வில் இருந்த நிலையில், அதிலிருந்து மீண்டு வந்த பிறகு ஃபில்ஸ் வென்ற முதல் கோப்பை இது. இந்த வெற்றியின் மூலமாக, உலகத் தரவரிசையில் 25-ஆவது இடத்துக்கு முன்னேறும் ஃபில்ஸ், பிரான்ஸ் வீரா்கள் வரிசையில் நம்பா் 1 வீரா் ஆகிறாா்.

ஷெல்டன் வெற்றி: ஜொ்மனியில் நடைபெற்ற பிஎம்டபிள்யூ ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-2, 7-5 என்ற செட்களில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியை வென்று சாம்பியன் ஆனாா். அவா் கேரியரில் இது 5-ஆவது பட்டமாகும்.

களிமண் தரைப் போட்டிகளில் 2002-க்குப் பிறகு சாம்பியன் ஆன முதல் அமெரிக்க வீரராக ஷெல்டன் பெருமை பெற்றாா். அத்துடன் 500 புள்ளிகள் கொண்ட ஏடிபி போட்டிகளில் 3 முறை சாம்பியன் ஆன முதல் அமெரிக்கா் என்ற சாதனையும் படைத்தாா்.