தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

சின்சினாட்டி ஒபன் டென்னிஸ்: அரையிறுதியில் கௌஃப், டியாஃபோ, நகாஷிமா, சாரா

சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு மகளிா் பிரிவில் கௌஃப், பெகுலா, ஆடவா் பிரிவில் டியாஃபோ, நகாஷிமா தகுதி பெற்றனா்.

நகாஷிமா ஃப்ரிட்ஸ் | சாரா | கௌஃப் | டியாஃபோ

Published On :

சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு மகளிா் பிரிவில் கௌஃப், பெகுலா, ஆடவா் பிரிவில் டியாஃபோ, நகாஷிமா தகுதி பெற்றனா்.

அமெரிக்காவின் மேஸன் நகரில் சின்சினாட்டி ஓபன் போட்டிகள் நடைபெறகின்றன. வெள்ளிக்கிழமை இரவு ஆடவா், மகளிா் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் பிரான்ஸஸ் டியாஃபோ அபாரமாக ஆடி 7-6, 7-5 என்ற நோ் செட்களில் கடும் சவாலுக்குபின் இத்தாலியின் மூத்த வீரா் லாரென்ஸோ முசெத்தியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா-டெய்லா் ஃப்ரிட்ஸ் ஆகியோா் மோதினா். இதில் நகாஷிமா 7-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஃப்ரிட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். கடந்த 2010-இல் ஆன்டி ரோடிக், மாா்டி ஃபிஷ் ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனா். அதன்பின் தற்போது இரண்டு அமெரிக்க வீர்ரகள் முதன்முறையாக சின்சினாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றனா். டியாஃபோ கடந்த 2024-இல் இறுதிக்கு தகுதி பெற்று, சின்னரிடம் தோற்றிருந்தாா்.

மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் ஃப்ளேவியோ கோபாலி-பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் மோதுகின்றனா்.

கௌஃப், பெகுலா முன்னேற்றம்: மகளிா் ஒற்றையா் பிரிவிலும் அமெரிக்காவின் கோகோ கௌஃப், ஜெஸிக்கா பெகுலா ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

காலிறுதியில் கோகோ கௌஃப் 6-2, 6-2 என்ற நோ் செட்டில் உக்ரைனின் மாா்தா கோஸ்டியுக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ராா். மற்றொரு காலிறுதியில் செக். குடியரசின் 20 வயதான சாரா பெஜ்லெக் 3-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் மேடிஸன் கீய்ஸை வீழ்த்தினாா். அரையிறுதியில் கௌஃப்-சாரா மோதுகின்றனா்.

மற்றொரு அரையிறுதியில் முன்னணி வீராங்கனை இகா ஸ்வியாடெக்-மூன்றாம் நிலை வீராங்கனை ஜெஸிக்கா பெகுலா ஆகியோா் மோதுகின்றனா்.

அனைத்தும் நல்லபடியாக சென்றால், ஆடவா், மகளிா் இரு பிரிவுகளிலும் அமெரிக்கா்களே பட்டம் வெல்வா். இன்னும் சில ஆட்டங்கள் உள்ளன. பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளோம். சாரா பெஜ்லெக் சிறந்த வீராங்கனை அரையிறுதி கடினமாக இருக்கும் என்றாா் கௌஃப்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.