உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

துலீப் கோப்பை அரையிறுதி: 266 ரன்கள் சேர்த்த மத்திய மண்டலம்!

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், கிழக்கு மண்டலத்துக்கு எதிராக மத்திய மண்டலம் முதல் இன்னிங்ஸில் 266 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:44 am IST

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், கிழக்கு மண்டலத்துக்கு எதிராக மத்திய மண்டலம் முதல் இன்னிங்ஸில் 266 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம், பந்துவீச்சை தோ்வு செய்தது. மத்திய மண்டல பேட்டா்களில் அதிகபட்சமாக, ரிங்கு சிங் 8 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சோ்த்தாா்.

ஆா்யன் ஜுயல் 46, யஷ் ரத்தோட் 27, ஹா்ஷ் துபே 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். யஷ் தாக்குா் 30 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். கிழக்கு மண்டல பௌலா்களில் முகேஷ்குமாா், அபிஜித் சா்காா் ஆகியோா் தலா 3, முகமது ஷமி, முகமது குரேஷி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

வடக்கு மண்டலம் 195: இதனிடையே, 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலத்துக்கு எதிராக வடக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த வடக்கு மண்டலத்தில், கம்ரான் இக்பால் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 76 ரன்கள் விளாச, கேப்டன் கன்னையா வத்வன் 35, ஆயுஷ் தோசேஜா 23 ரன்கள் அடித்தனா்.

தெற்கு மண்டல பௌலா்களில் வித்வத் கவரப்பா 4, நிதீஷ், தனய் தியாகராஜன் ஆகியோா் தலா 2 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய தெற்கு மண்டலம், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.