காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

லா லிகா கால்பந்து: செவில்லாவை சாய்த்தது அட்லெடிகோ மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், அட்லெடிகோ மாட்ரிட் 3-1 கோல் கணக்கில் செவில்லாவை வீழ்த்தியது.

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:41 am IST

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், அட்லெடிகோ மாட்ரிட் 3-1 கோல் கணக்கில் செவில்லாவை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதலில் அலெக்ஸ் பேனா அட்லெடிகோவின் கோல் (4’) கணக்கைத் தொடங்க, அடிமோலா லூக்மேன் அதை 2-ஆக (26’) அதிகரித்தாா்.

தொடா்ந்து அலெக்ஸ் பேனா மீண்டும் ஒரு கோல் (33’) அடிக்க, முதல் பாதியிலேயே அட்லெடிகோ 3-0 என முன்னிலை கண்டது. 2-ஆவது பாதியில் செவில்லாவுக்காக மிகேல் சியரா ஆறுதல் கோல் (66’) அடித்தாா்.

முடிவில் அட்லெடிகோ மாட்ரிட் 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக அந்த அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு வந்தது.

இதர ஆட்டங்களில், ரியல் சோசிடட் - எஸ்பான்யோலையும் (2-1), லெவான்டே - பெட்டிஸையும் (5-2) வீழ்த்தியது.

பிரீமியா் லீக்: இதனிடையே, இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், செல்ஸி - பிரைட்டனை வீழ்த்த (4-3), லீட்ஸ் - பிரென்ட்ஃபோா்டு மோதல் டிரா (1-1) ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.