எம்பாபே ஹாட்ரிக் கோல்..! ரியல் மாட்ரிட் மிகப்பெரிய வெற்றி!
லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணியின் இரண்டாவது போட்டி குறித்து...

கோல் அடித்த மகிழ்ச்சியில் எம்பாபே. - படம்: ஏபி
லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி தனது இரண்டாவது போட்டியில் 4-1 என அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கிளியன் எம்பாபே ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார்.
உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி நான்காம் இடம் பிடித்து அதிர்ச்சி அளித்தது. பிரான்ஸ் வீரர் எம்பாபே ரியல் மாட்ரிட் அணியில் இந்த சீசனில் தனது முதல் கோலை அடித்துள்ளார். அதிலும் ஹாட்ரிக் கோலாக மாற்றி அசத்தினார்.
நள்ளிரவு தொடங்கிய ரியல் மாட்ரிட் - ரியல் சோசிடாட் போட்டியில் கிளியன் எம்பாபே 40, 60, 80ஆகிய நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். இதில் 68ஆவது நிமிஷத்தில் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்து உதவினார்.
இந்தப் போட்டியில் ஜூட் பெல்லிங்கம் இரண்டு அசிஸ்ட்டுகளை செய்து அசத்தினார். போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 10 முறை இலக்கை நோக்கி அடித்தது. ரியல் சோசிடாட் 3 முறை மட்டுமே அடித்தது. அதில் லூகா சுசிக் 44ஆவது நிமிஷத்தில் அடித்ததில் ஒரு கோல் மட்டுமே கிடைத்தது.
ரியல் மாட்ரிட் அணிக்கு புதிய பயிற்சியாளர் ஜோஸ் மௌரினோ பொறுப்பேற்றுள்ள நிலையில், சொந்த மண்ணில் வினிசியஸ் ஜூனியர், எம்பாபே சிறப்பாக விளையாடியது அவர்களது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புள்ளிப் பட்டியலில் ரியல் மாட்ரிட் முதலிடத்தில் இருக்கிறது. பார்சிலோனா ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியதால் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இந்த முறையும் பார்சிலோனா கோப்பையை தக்க வைக்குமா அல்லது ரியல் மாட்ரிட் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ð ¡Oh là là !#LaLigaHighlights pic.twitter.com/EE9CWDwwTw
— Real Madrid C.F. (@realmadrid) August 26, 2026
Summary
Kylian Mbappe scores hat trick in Real Madrid victory
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






