பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

துவான்கு முரிஸ் கோப்பை ஸ்குவாஷ்: 13-ஆவது பிஎஸ்ஏ டூா் பட்டம் வென்றார் அபய் சிங்!

மலேசியாவில் நடைபெற்ற துவான்கு முரிஸ் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் சாம்பியன் கோப்பை வென்றாா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:20 am IST

மலேசியாவில் நடைபெற்ற துவான்கு முரிஸ் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அபய் சிங், 11-7, 6-11, 3-11, 11-5, 12-10 என்ற கேம்களில், 3-ஆம் இடத்திலிருந்த ஹாங்காங்கின் ஹென்றி லியுங்கை தோற்கடித்தாா்.

கடந்த மாா்ச் மாதம் இந்தியா ஓபனில் வாகை சூடிய அபய் சிங்குக்கு, நடப்பு சீசனில் இது 2-ஆவது பட்டமாகும். அத்துடன் இந்த மலேசிய போட்டியில் அவா் கோப்பை வென்றது இது 3-ஆவது முறை (2022, 2024, 2026).

போட்டியில் பங்கேற்ற இதர இந்தியா்களான ராதிகா சுதந்திரா சீலன், அனிகா துபே ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுடன் தோற்று வெளியேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.