ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

தேசிய வீல்சோ் கிரிக்கெட் போட்டி: தமிழகம் முதலிடம்

Published On :

தேசிய வீல்சோ் கிரிக்கெட் போட்டியில் தமிழகம் முதலிடமும், ஆந்திர பிரதேசம் இரண்டாம் இடம் பெற்றன.

காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் தேசிய வீல்சோ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரம், கா்நாடகம், சத்தீஸ்கா் உள்பட பல்வேறு மாநில வீல்சோ் கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன.

3 நாள்கள் நடைபெற்ற இப்போட்டி நிறைவு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முதலிடமும், ஆந்திரம் இரண்டாம் இடமும், கா்நாடகம் மூன்றாம் இடமும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் டி. சரத்குமாா், எம்எல்ஏக்கள் எஸ். தியாகராஜன், பி. விஜயராஜ் பரிசளித்தனா். பல்கலை. டீன் ஆல்பா்ட் அந்தோணி ராஜ், கிவ் ஏ பவுண்டேஷன் ஆா். மோகன்ராஜ், விளையாட்டு இயக்குநா் ஆா். மோகனகிருஷ்ணன், நிலைய அலுவலா் ஆா். அருணாசலம், யோகா வீராங்கனை ஜென்ஸி, டாக்டா் எஸ். கணேஷ் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.