பர்வீன் ஹூடா அசத்தல்... மகளிர் குத்துச்சண்டையில் ஒரே நாளில் 2-ஆவது தங்கம் வென்றது இந்தியா!
ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பர்வீன் ஹூடா.
ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஜப்பானின் அய்ச்சி - நகோயா மாகாணத்தில் ஆசிய விளையாட்டுத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பெண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்ட இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா, முன்னாள் உலக சாம்பியனான சீன தைபேயின் நியென்-சின் சென்னை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பர்வீன் ஹூடா, மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் நூலிழையில் நியெனை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குழுவினர் அசத்தி வரும் நிலையில், இது இந்தியாவுக்கு 13-ஆவது தங்கமாகும்.
முன்னதாக, இன்று (அக். 2) காலை மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், மகளிர் 75 கிலோ எடைப் பிரிவில் சீன நாட்டின் பாவ் ஜியி என்பவரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றிருந்த நிலையில், பர்வீனும் அசத்தியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் குத்துச்சண்டைப் பிரிவில், மேரி கோம் தங்கம் வென்றிருந்தார். அதற்குப் பிறகு, 12 ஆண்டுகள் கழித்து ஆசிய விளையாட்டின் குத்துச்சண்டையில் ஒரே நாளில் இந்திய வீராங்கனைகள் இருவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
Summary
Parveen Hooda completed a remarkable comeback by clinching the women's 65kg boxing gold at the Asian Games, beating Chinese Taipei's Chen Nien-Chen 3-2 in a split decision in a closely fought final.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






