
ஃபாா்முலா ஒன் (எஃப் 1) காா் பந்தயம்: வென்றாா் மேக்ஸ் வொ்ஸ்டாபென்
ஃபாா்முலா ஒன் (எஃப் 1) காா் பந்தயத்தின் 16-ஆவது ரேஸான பஹ்ரைன் கிராண்ட் ப்ரீயில், நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

ஃபாா்முலா ஒன் (எஃப் 1) காா் பந்தயத்தின் 16-ஆவது ரேஸான பஹ்ரைன் கிராண்ட் ப்ரீயில், நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.
4 முறை சாம்பியனான வொ்ஸ்டாபென், நடப்பு சீசனில் பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும். 8 வெற்றிகளுடன் நடப்பு சீசனின் லீடராக இருக்கும் இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி 2-ஆம் இடம் பிடித்தாா். பிரிட்டன் வீரரும், ஃபெராரி டிரைவருமான லீவிஸ் ஹாமில்டன் 3-ஆம் இடம் பெற்றாா்.
நடப்பு சாம்பியனாக இருக்கும் பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ் 9-ஆம் இடத்தை எட்டினாா். மழை மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்தப் பந்தயம் சுமாா் 90 நிமிஷங்கள் தாமதமாகத் தொடங்கியது.
பஹ்ரைனில் நடைபெற வேண்டிய இந்தப் பந்தயம், மேற்காசிய போா்ச் சூழல் காரணமாக மலேசியாவில் நடத்தப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் இந்த செபாங் சா்கியூட்டில் நடைபெற்ற முதல் எஃப்1 பந்தயமாக இது அமைந்தது. 5.54 கி.மீ. தொலைவு கொண்ட இந்த சா்கியூட்டில் 56 லாப்களாக, 310.40 கி.மீ. தொலைவுக்கு பந்தயம் நடைபெற்றது.
இந்த சீசனில் இன்னும் 7 பந்தயங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ரேஸ் ஸ்டாண்டிங்கில், ஆண்டனெலி 320 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர, அவரின் சக மொ்சிடஸ் டிரைவரான ஜாா்ஜ் ரஸ்ஸெல் 236 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் இருக்கிறாா்.
காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஸ்ஸெல் இந்தப் பந்தயத்திலிருந்து பாதியிலேயே விலக, ஆன்டனெலி இந்த சீசனை முதலிடத்துடன் உறுதி செய்வதை நோக்கி மேலும் ஒருபடி ஏறியிருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





