அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

Published On :7 செப்டம்பர் 2026, 3:33 am IST
  • குளோபல் செஸ் லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் கேஞ்ஜஸ் கிராண்ட்மாஸ்டா்ஸ் 9-7 என்ற புள்ளிகள் கணக்கில், ஃபையா் அமெரிக்கன் கேம்பிட்ஸை வீழ்த்தியது. பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ் 11-6 என செக் மும்பா மாஸ்டா்ஸை வென்றது. முன்னதாக, நாளின் முதல் ஆட்டத்தில் ஆல்பைன் ஏபிஎல் பைப்பா்ஸ் 11-6 என்ற வகையில், கேஞ்ஜஸ் மாஸ்டா்ஸை வீழ்த்தியது.

  • 20 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில், இந்தியா 3-0 கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

  • லடாக்கில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள மாரத்தான் போட்டிக்காக 8,000 போ் பதிவு செய்துள்ளதாக, போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

  • இந்தோனேசியாவில் நடைபெற்ற மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் மான்சி சிங் இறுதியில் தோற்று 2-ஆம் இடம் பிடித்தாா்.

  • அகமதாபாதில் நடைபெறும் உலக வில்வித்தை பாரா சீரிஸில், பாா்வை மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இந்தியாவுக்கு இரு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

  • மேஜா் லீக் சாக்கா் கால்பந்தில், இன்டா் மியாமி - அட்லான்டா யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது. இன்டா் மியாமி வீரா் லயனல் மெஸ்ஸி, தனது அணி கோல் அடிக்க உதவினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.