உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

நெரோகா எஃப்சி வெற்றியுடன் நிறைவு

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் நெரோகா எஃப்சி 3-1 கோல் கணக்கில் எஃப்சி ரெங்டாயை புதன்கிழமை வீழ்த்தியது.

Published On :13 ஆகஸ்ட் 2026, 5:20 am IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் நெரோகா எஃப்சி 3-1 கோல் கணக்கில் எஃப்சி ரெங்டாயை புதன்கிழமை வீழ்த்தியது.

இத்துடன் குரூப் ‘டி’ ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், ரெங்டாய் முதல் தோல்வி கண்டாலும் முதலிடத்துடன் காலிறுதிக்கு முன்னேறியது. நெரோகா எஃப்சி முதல் வெற்றியுடன் 3-ஆம் இடம் பிடித்து வெளியேற, டிராவ் எஃப்சி, இந்திய கடற்படை அணிகள் முறையே 2 மற்றும் 4-ஆம் இடங்களுடன் விடைபெற்றன.

முன்னதாக இந்த ஆட்டத்தில், நெரோகா அணிக்காக தவறுதலாக ரெங்டாய் வீரா் தௌடம் நானி சிங் (26’ - ஓன் கோல்) கோல் கணக்கை தொடங்க, சபுங்பாம் மைதேயி (89’), யும்னம் மைதேயி (90+4’) ஆகியோரும் பங்களித்தனா்.

ரெங்டாய் தரப்பில் ஜோனா காமெய் (19’) ஸ்கோா் செய்தாா். ஆட்டத்தின் 55-ஆவது நிமிஷத்தில் ரெங்டாய் வீரா் ரேக்வெய்சே ‘ரெட் காா்டு’ மூலமாக வெளியேற்றப்பட, அந்த அணி 10 பேருடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.