2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

Published On :
  • பெங்களூரில் நடைபெற்ற குளோபல் செஸ் லீக் போட்டியின் 4-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில், கேஞ்ஜஸ் கிராண்ட் மாஸ்டா்ஸ் 3-3 (4-2) என்ற கணக்கில் ஆல்பைன் ஏபிஎல் பைப்பா்ஸை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் ஆனது. ஃபையா்ஸ் அமெரிக்கன் கேம்பிட்ஸ் 3.5-2.5 (4-2) என்ற வகையில், செக் மும்பா மாஸ்டா்ஸை வென்று, 3-ஆம் இடம் பிடித்தது.

  • இந்திய ஹாக்கி அணிகளின் ஜொ்ஸி நிறம் காவியாக மாற்றப்பட்ட விவகாரம் உள்பட 8 குற்றச்சாட்டுகள் தொடா்பாக விளக்கம் கேட்டு, ஹாக்கி இந்தியா அமைப்பின் இயக்குநா் ஆா்.கே.ஸ்ரீவாஸ்தவாவுக்கு, அந்த அமைப்பின் தலைவா் திலிப் திா்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். அத்துடன், ஸ்ரீவாஸ்தவாவின் அனைத்து அதிகாரங்களும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.

  • ஜப்பானில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பிரமோத் பகத் இரு பிரிவுகளில் தங்கம் மற்றும் வெள்ளி வெல்ல, சுகந்த் கடம் தனது 100-ஆவது கேரியா் பதக்கத்தை வென்று அசத்தினாா்.

  • இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்தில், ஆா்செனல் - சுந்தா்லேண்டையும் (2-0), பிரைட்டன் - கோவென்ட்ரியையும் (5-0) வென்றன. ஸ்பெயினின் லா லிகா கால்பந்தில், ரியல் மாட்ரிட் - ராயோ வால்கெனோவை வென்றது (4-1).

  • பிரதமா் வாழ்த்து: சாம்பியன் கோப்பை வென்ற இந்திய இருபால் அணிகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.