சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வில்வித்தை: இந்திய ஆடவர் அணிக்கு வெள்ளிப் பதக்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை ஆடவர் காம்பவுண்ட் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய அணி தென் கொரியாவிடம் வீழ்ந்தது...

News image
Updated On :28 ஆகஸ்ட் 2018, 7:17 am

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை ஆடவர் காம்பவுண்ட் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய அணி தென் கொரியாவிடம் வீழ்ந்தது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 

காம்பவுண்ட் பிரிவு அரையிறுதியில் சீன தைபேவை 227-230 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா. இதையடுத்து இறுதிச்சுற்றில் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்டது இந்திய அணி. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றின் முடிவில் இரு அணிகளும் தலா 229 புள்ளிகள் பெற்றன. இதையடுத்து நடைபெற்ற ஷூட் ஆஃப் முறையில் கொரிய அணி வென்று தங்கப்பதக்கத்தை வென்றது. ரஜத் செளகான், அமன் சயினி, அபிஷேக் வர்மா ஆகியோரைக் கொண்ட இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 

இதற்கு முன்பு, வில்வித்தை மகளிர் காம்பவுண்ட் பிரிவு இறுதிச்சுற்றில் தென் கொரிய அணி 231-228 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று தங்கத்தைத் தட்டிச் சென்றது. இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. மதுமிதா குமாரி, முஷ்கன் கிரர், ஜோதி வென்னம் ஆகியோர் இணைந்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.