பிரையன் லாராவின் சாதனையைத் தாண்ட முடியாமல் ஏமாற்றிய கிறிஸ் கெயில்!
கிறிஸ் கெயிலுக்கு இந்த உலகக் கோப்பை மிகவும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது...


கிறிஸ் கெயிலுக்கு இந்த உலகக் கோப்பை மிகவும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது.
தனது கடைசி உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய கெயில் 9 ஆட்டங்களில் 242 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் 2 அரை சதங்கள். ஸ்டிரைக் ரேட் - 88.32. சிக்ஸர்கள் - 12. இதற்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று கெயில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் மிகவும் எதிர்பார்த்த ஒரு சாதனையையும் அவரால் நிகழ்த்த முடியாமல் போய்விட்டது.
உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் சச்சின். 44 இன்னிங்ஸில் 2278 ரன்கள். நான்காவது இடத்தில் பிரையன் லாரா உள்ளார். அவர் 33 இன்னிங்ஸில் 1225 ரன்கள் எடுத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களில் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் அவருக்குத்தான் முதலிடம்.
ஆனால் லாராவின் சாதனையை கெயில் தாண்டுவதற்கான வாய்ப்பு இருந்தது. எனினும் 5 உலகக் கோப்பையில் விளையாடிய கெயில், 1186 ரன்களுடன் தனது பங்களிப்பை முடித்துக்கொண்டார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 7 ரன்களுடன் ஆட்டமிழந்தார் கெயில். இதனால் லாராவின் சாதனையைப் பின்னுக்குத் தள்ள முடியாமல் போய்விட்டது.
கெயிலால் முடியாத நிலையில் லாராவின் சாதனை அடுத்தச் சில உலகக் கோப்பைப் போட்டிகள் வரை நீடிக்கும் என்று நம்பிக்கையாகக் கூறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...