ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணியிலிருந்து பிரபல பேட்ஸ்மேன் விலகல்! காயத்தில் அவதிப்படும் மற்றொரு வீரர்!

கவாஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமாக நான்கு வாரம் ஆகும் என்று கூறப்படுகிறது...

News image
Updated On :8 ஜூலை 2019, 7:30 am

எழில்

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி முதல் அரையிறுதியில் இந்தியா-நியூஸிலாந்து, இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸி.-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

கடந்த மே மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் 12-ஆவது உலகக் கோப்பை போட்டியில் பட்டம் வெல்லும் அணிகளாக ஆஸி, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் உள்ளிட்ட அணிகள் கருதப்பட்டன. இதில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் வெளியேறின. இலங்கையை கடைசி ஆட்டத்தில் வீழ்த்திய இந்தியா 15 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது. அதே நேரம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியுற்று இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய உலகக் கோப்பை அணியிலிருந்து பிரபல பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா காயம் காரணமாக விலகியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் காயமடைந்ததால் பேட்டிங் செய்தபோது பாதியில் விலகினார். பிறகு மீண்டும் அவர் விளையாட வந்தும் ஆஸி. அணியின் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போனது. 

கவாஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமாக நான்கு வாரம் ஆகும் என்று கூறப்படுகிறது. கவாஜாவுக்குப் பதிலாக மேத்யூ வேட் மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 1 முதல் தொடங்கவுள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கவாஜா விளையாடுவார் என்று ஆஸ்திரேலிய அணிப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதவிர தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின்போது, மார்கஸ் ஸ்டாய்னிஸுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஃபீல்டிங் செய்தபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் ஒருவேளை அவர் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலக நேர்ந்தால் நிலைமையைச் சமாளிக்க மிட்செல் மார்ஷ் ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.