2015-ல் சூப்பர் ஸ்டார்; 2019-ல்?: நியூஸிலாந்து ரசிகர்களை ஏமாற்றிய மார்டின் கப்தில்!
இந்தமுறை நியூஸிலாந்து ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமளித்துவிட்டார் கப்தில்..


2015 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றாலும் நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் தான் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினார்.
2 சதங்கள் 1 அரை சதத்துடன் 547 ரன்கள் எடுத்து அந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். அதில் ஒரு இரட்டைச் சதமும் உண்டு.
ஆனால் இந்தமுறை நியூஸிலாந்து ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமளித்துவிட்டார் கப்தில்.
73*, 25, 0, 35, 0, 5, 20, 8, 1
இதுதான் 2019 உலகக் கோப்பையில் கப்தில் எடுத்த ரன்கள். 167 ரன்கள். சராசரி - 20.87. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தொடக்க வீரர்களில் குறைந்த சராசரி கொண்டவர் கப்தில் மட்டுமே.
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திலாவது சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து பும்ரா பந்துவீச்சில் இன்று ஆட்டமிழந்தார் கப்தில். இதனால் அவருக்கு இந்த உலகக் கோப்பை மிகவும் ஏமாற்றமாகவும் சோகமாகவும் முடிவடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...