உ.கோ. அரையிறுதிப் போட்டிகளில் இதுவரை தோற்றிராத ஆஸ்திரேலியாவும் அதிக தடவை தோல்வியடைந்துள்ள நியூஸிலாந்தும்!

இந்திய அணிக்குச் சாதகமான ஒரு புள்ளிவிவரம் உள்ளது. உலகக் கோப்பைப் போட்டிகளில் அரையிறுதி ஆட்டங்களில்...
உ.கோ. அரையிறுதிப் போட்டிகளில் இதுவரை தோற்றிராத ஆஸ்திரேலியாவும் அதிக தடவை தோல்வியடைந்துள்ள நியூஸிலாந்தும்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 12-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுடன், நான்காவது இடத்தில் உள்ள நியூஸிலாந்து மோதுகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது. முதன்முறையாக உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது நியூஸிலாந்து.

எனினும் இந்திய அணிக்குச் சாதகமான ஒரு புள்ளிவிவரம் உள்ளது. உலகக் கோப்பைப் போட்டிகளில் அரையிறுதி ஆட்டங்களில் அதிக தடவை தோல்வியடைந்த அணியாக நியூஸிலாந்து உள்ளது. உ.கோ. அரையிறுதிகளில் இந்திய அணி 3 தடவையும் (1987, 1996, 2015) நியூஸிலாந்து அணி 6 தடவையும் (1975, 1979, 1992, 1999, 2007, 2011) தோற்றுள்ளன.  

உலகக் கோப்பைப் போட்டிகளில் அரையிறுதியில் அதிக தடவை தோல்வி

6 நியூஸிலாந்து 
4 பாகிஸ்தான் 
3 இந்தியா 
3 தென் ஆப்பிரிக்கா 
2 இங்கிலாந்து 
1 கென்யா 
1 இலங்கை 
1 மேற்கிந்தியத் தீவுகள் 
0 ஆஸ்திரேலியா 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com