ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

3 தோல்விகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க வீரர்கள் சோகமாகவும் கோபமாகவும் உள்ளார்கள்: கிறிஸ் மோரிஸ்

இந்த நிலையை இன்றிரவு சரிசெய்து, நாளை முதல் பயிற்சிக்குத் திரும்புவோம்...

News image
Updated On :6 ஜூன் 2019, 7:31 am

எழில்

தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2019 உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சஹல், ரோஹித் சர்மா அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செளதாம்ப்டன் ரோஸ் பெளலில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 227/9 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 230/4 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 2 சிக்ஸர், 13 பவுண்டரியுடன் 144 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதையும் அள்ளினார். இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா பெறும் 3-ஆவது தொடர் தோல்வி இதுவாகும். 

தோல்விக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அணி வீரர்கள் வருத்தமாகவும் சிறிது கோபமாகவும் உள்ளார்கள். இந்த நிலையை இன்றிரவு சரிசெய்து, நாளை முதல் பயிற்சிக்குத் திரும்புவோம். அடுத்த ஆட்டத்தில் எதிரணியை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம். இப்போது நிலவரம் தெளிவாக உள்ளது. அடுத்த ஆறு ஆட்டங்களையும் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெறவேண்டும். இது நடக்க, எங்களுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவைப்படும். 

ஒரு வாரத்தில் மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ளோம். எங்களுக்கு வழங்கப்பட்ட ஆட்ட அட்டவணை கொஞ்சம் கடினமாகவே உள்ளது. மூன்று ஆட்டங்களில் தோற்றிருப்பது உற்சாகத்தைக் குறைக்கிறது. எனினும் வலுவான மனநிலை கொண்ட வீரர்கள் அணியில் உள்ளார்கள்.

எங்கள் நாட்டில் உள்ள ரசிகர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான் - எங்களுடன் இருங்கள், எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். உங்களுக்காக நாங்கள் இன்னும் கூடுதலாக எங்களுடைய முயற்சியை வெளிப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.