கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுவோம்: ஸ்டீவ் ஸ்மித்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

News image

ஸ்டீவ் ஸ்மித் - படம் | ஐசிசி

Updated On :22 ஆகஸ்ட் 2024, 4:09 pm

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது சிறந்த இரண்டு அணிகளாக விளங்குகின்றன. கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எதிர்த்து விளையாடியது. இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டமும் வென்றது. கடந்த இரண்டு முறையாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. அவர்கள் மிகவும் நன்றாக கிரிக்கெட் விளையாடினார்கள்.

இந்த முறை இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்த முறை பார்டர் கவாஸ்கர் தொடரைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.