டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய மகளிரணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 26) அறிவித்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக, உலகக் கோப்பைத் தொடர் வங்கதேசத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. அங்கு வன்முறை காரணமாக போட்டி நடத்தப்பட முடியாத சூழல் நிலவுவதால், போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
டி20 உலகக் கோப்பைக்காக அனைத்து அணிகளும் தங்களை தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய மகளிரணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 26) அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய மகளிரணி விவரம்
அலிஸா ஹேலி (கேப்டன்), தஹிலா மெக்ராத் (துணைக் கேப்டன்), டார்ஸி பிரௌன், ஆஸ்லே கார்டனர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலானா கிங், ஃபோபி லிட்ச்ஃபீல்ட், சோஃபி மோலினெக்ஸ், பெத் மூனி, எல்லிஸ் பெரி, மேகன், அன்னபெல் சதர்லேண்ட், ஜியார்ஜியா வேர்ஹாம் மற்றும் டைலா வேமின்க்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.