டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி இன்று (ஆகஸ்ட் 27) அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா, துபை நகரங்களில் நடைபெறவுள்ளன. போட்டிகள் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்குகிறது. உலகக் கோப்பை போட்டிகள் முதலில் வங்கதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர், அங்கு நிலவும் அரசியல் அமைதியின்மை காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
டி20 உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களை தயார் படுத்தி வருகின்றன. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 27) அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து மகளிரணி விவரம்
ஹெதர் நைட் (கேப்டன்), லாரன் பெல், மையா பௌச்சியர், அலைஸ் கேப்ஸி, சார்லி டீன், சோஃபியா டங்லி, சோஃபியா எக்கல்ஸ்டோன், டேனி கிப்ஸன், சாரா கிளென், பெஸ் ஹீத், எமி ஜோன்ஸ், ஃப்ரெயா கெம்ப், லின்ஸி ஸ்மித், நாட் ஷிவர்-பிரண்ட் மற்றும் டேனி வியாட்.