ஜோ பர்ன்ஸ்
ஜோ பர்ன்ஸ்படம் | ஐசிசி

இத்தாலி அணி கேப்டனாகும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

இத்தாலி கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Published on

இத்தாலி கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஜோ பர்ன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்தாண்டு நடைபெறும் டி20 ஐரோப்பிய இறுதிச்சுற்றுக்கான போட்டிக்கு முன்னதாக, தற்போதைய இத்தாலி கேப்டன் கரேத் பெர்க்கிடம் இருந்து ஜோ பர்ன்ஸ் கேப்டன் பொறுப்பைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இத்தாலி அணி தகுதிபெற்றால் 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான போட்டி விளையாடும் வாய்ப்பை பெறும்.

இதையும் படிக்க..: அடிலெய்டு டெஸ்ட்டின் முதல் நாளில் புதிய சாதனை!

ஜோ பர்ன்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 23 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், கடந்த ஜூன் மாதம் தனது தாய் நாடான இத்தாலிக்காக அறிமுகமானார். அப்போது தகுதிச்சுற்று ஏ போட்டியில் விளையாடினார்.

ஜோ பர்ன்ஸ் 5 போட்டிகளில் விளையாடி 211 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இத்தாலி அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல வழிவகுத்தது. அதன்படி, டி20 உலகக் கோப்பையில் பங்குபெறும் பெருமையை இத்தாலி அணி பெறும்.

2025 ஆம் ஆண்டுக்கான பிரந்திய போட்டிகளில் குர்னெஸி, ஜெர்ஸி, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை இத்தாலி எதிர்கொள்கிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இடம்பிடிக்கும்.

இதையும் படிக்க..: பிங்க் பந்து கிரிக்கெட்டில் சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com