
பார்டர் கவாஸ்கர் தொடரின் 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தெர்வு செய்தது.
இதில் 44.1 ஓவரில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் ஆஸி. சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 535 நாள்களுக்குப் பிறகு மீண்டும் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பிங்க் பந்தில் மிட்செல் ஸ்டார்க் அதிகமான முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
பிங்க் பந்தில் அதிகமுறை 5 விக்கெடுகள் வீழ்த்தியவர்கள்
1. மிட்செல் ஸ்டார்க் - 4
2. டிரெண்ட் போல்ட் - 2
3. ஜோஷ் ஹேசில்வுட் - 2
4. அக்ஷர் படேல் - 2
முதல் டெஸ்ட்டில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் ஸ்டார்க்கிடம் கிண்டல் செய்ததுக்கு இந்தமுறை சிறப்பாக பதில் கூறியுள்ளதாக சமூக ஊடகங்களில் பாராட்டு கிடைத்து வருகிறது.
முதல் பந்தில் விக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்பந்திலேயே விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முன்னாள் நியூசி. பந்துவீச்சாளர் ஹாட்லீயை சமன்செய்துள்ளார்.
பெட்ரோ கோலின்ஸ் - 3
மிட்செல் ஸ்டார்க் - 3*
ரிச்சர்ட் ஹாட்லீ - 3
கோயிஃப் அர்னால்டு - 2
கபில் தேவ் - 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.